Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுயெஸ் கால்வாய் - தரை தட்டிய சரக்குக் கப்பலை மீட்க மேலும் 2 இழுவைப் படகுகள் பயன்படுத்தப்படவுள்ளன

சுயெஸ் கால்வாய் - தரை தட்டிய சரக்குக் கப்பலை மீட்க மேலும் 2 இழுவைப் படகுகள் பயன்படுத்தப்படவுள்ளன

வாசிப்புநேரம் -

எகிப்தின் சுயெஸ் (Suez) கால்வாயில் தரை தட்டியிருக்கும் சரக்குக் கப்பலை மீட்க மேலும் இரண்டு இழுவைப் படகுகள் அங்கு சென்றுள்ளன.

மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் வழக்கமாக அந்தப் பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் வேறு வழிகளுக்குத் திரும்பியுள்ளன.

"Ever Given" என்ற ஜப்பானிய சரக்குக் கப்பல் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் வழக்கமாகச் சென்று வருவதுண்டு.

கடந்த செவ்வாய்க்கிழமை அது சூயஸ் கால்வாயின் நீண்ட பகுதியில் மாட்டிக்கொண்டது.
அதை மீட்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் பெரிய பலன் கிடைக்கவில்லை.

சூயஸ் கால்வாய் வட்டாரத்தில், கப்பல் போக்குவரத்து தடைபட்டதால் ஒரு நாளைக்கு
9 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் உலகக் கப்பல் வணிகக் கட்டமைப்பு தற்போது மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தரைதரட்டிப்போன 400 மீட்டர் நீளமுள்ள கப்பலை நகர்த்த, புதிய இழுவைப் படகுகள் உதவும் என்று நம்பப்படுகிறது.

கப்பலுக்கு அடியில் உள்ள மண்ணும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்