Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கருக்கலைப்புக்கு எதிரான பேரணி- டிரம்ப் புகழாரம்

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், கருக்கலைப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தியுள்ளனர். பேரணி நேற்று நடந்தது.

வாசிப்புநேரம் -

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், கருக்கலைப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தியுள்ளனர். பேரணி நேற்று நடந்தது. அந்தப் பேரணிக்குப் பின்னால் இருக்கும் கொள்கை 'மிக அழகானது' என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.

திரு டிரம்ப் videolink வழி National Mall கடைத்தொகுதியில் கூடியிருந்தவர்களிடம் அவர் நேரடியாக உரையாற்றியபோது அவ்வாறு கூறினார்.

The March for Life என்பது பேரணியின் பெயர்.

ஒவ்வோர் உயிருக்கும் இறைத்தன்மை உள்ளது என்பதைப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் நம்புவதால் அவர்கள் மற்றவர்களிடத்தில் அன்பு பாராட்டுவதாகத் திரு. டிரம்ப் கூறினார்.

1973 ஆம் ஆண்டில் "Roe v. Wade" என்ற வழக்கில், கருக்கலைப்பை அமெரிக்காவில் சட்டப்படி அனுமதிக்க வழிவிட்டது. அதனை எதிர்த்தே பேரணி நடத்தப்பட்டது. அந்தப் பேரணி 45 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் கருக்கலைப்பு விதிமுறைகளின் கடுமையை மேலும் அதிகரிக்க திரு டிரம்ப் ஆதரவளித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்