Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஆகாய வெளியைத் தொடர்ந்து பாதுகாப்பாய் வைத்திருக்கும் ஆகாயப்படை

சிங்கப்பூரின் ஆகாயவெளி சிறியது; இருந்தாலும் விமானப் போக்குவரத்து ஆக அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று சிங்கப்பூர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் ஆகாயவெளி சிறியது; இருந்தாலும் விமானப் போக்குவரத்து ஆக அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று சிங்கப்பூர்.

இந்த வருடம் தனது 50ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூர் ஆகாயப்படை ஆகாய வெளியைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதில் முக்கியப் பங்கு வகித்துவருகிறது.

செப்டம்பர் 11 தாக்குதல்களைப் போல் மேலும் ஒரு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் ஆகாயவெளியைப் பயன்படுத்தும் அபாயம் அதிகம்.

கடந்த ஆண்டுகளில் சிங்கப்பூரும் அத்தகைய மிரட்டல்களை எதிர்கொள்வதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. 2008ஆம் ஆண்டு சிறிய ஆஸ்திரேலிய விமானம் ஒன்று அனுமதியின்றி சிங்கப்பூர் ஆகாயவெளிக்குள் நுழைந்தது.

சிங்கப்பூர் ஆகாயப்படை விமானிகள் அதனை இடைமறித்து சாங்கி விமான நிலையத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வந்தனர்.

சம்பவத்தால் விமான நிலையத்திற்குமேல் இருக்கும் பொதுப்பயண ஆகாயவெளி சுமார் ஒரு மணிநேரத்திற்கு மூடப்பட்டது. அந்தச் சம்பவத்தைப் போல் அனுமதியின்றி சிங்கப்பூர் ஆகாய வெளிக்குள்ளோ, அருகேயோ பறக்கும் விமானங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கிட்டத்தட்ட தினமும் ஒருமுறை கையாண்டு வருகிறது சிங்கப்பூர் ஆகாயப்படை. அத்தகைய மிரட்டல்களைச் சமாளிக்க ஆகாயப்படையினர் கடும் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்

மேலும் தொடர்ந்து மேம்பட்டிருக்க அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 50 ஆண்டுகளாக சிங்கப்பூர் ஆகாயவெளியைப் பாதுகாப்பாக வைத்துவருகிறது சிங்கப்பூர் ஆகாயப்படை.அடுத்த 50 ஆண்டுகளையும் தாண்டி சிங்கப்பூரை அவ்வாறே வைத்திருக்க அது தொடர்ந்து சிறப்பாக இயங்கிவருவது அவசியம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்