Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பதவியேற்று ஓராண்டாகிறது - டிரம்ப் சாதித்தது என்ன?

அமெரிக்க அதிபராத் திரு. டோனல்ட் டிரம்ப் பதவியேற்று ஓராண்டாகிறது.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபராத் திரு. டோனல்ட் டிரம்ப் பதவியேற்று ஓராண்டாகிறது. 'அமெரிக்காவுக்கு முதன்மை' எனும் தமது பிரசார முழக்கவரியை அவர் முழுமூச்சுடன் செயல்படுத்தியதாகவே அமெரிக்கர்கள் பலர் கருதுகின்றனர்.

அமெரிக்கப் பொருளியல் குறித்த நம்பிக்கை, பங்குச் சந்தை முன்னேற்றம், மேம்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்த வேலையின்மை விகிதம் ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'அமெரிக்காவுக்கு முதன்மை' எனும் திரு. டிரம்ப்பின் முழக்கவரி நாட்டில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓராண்டு காலத்தில் தமது வாக்குறுதிகளில் முக்கியமான சிலவற்றை அவர் நிறைவேற்றியுள்ளார்.  அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய புதிய வரிவிதிப்புச் சட்டம் அவற்றுள் ஒன்று.அதன்மூலம் நிறுவனவரி 35 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காட்டுக்குக் குறைக்கப்பட்டது.அமெரிக்கப் பொருளியல் 3 விழுக்காட்டு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.

வேலையின்மை விகிதமும், பணவீக்கமும் ஓராண்டில் குறைந்துள்ளன. அந்த வகையில் டிரம்ப் நிர்வாகம் சந்தேகத்துக்கு இடமின்றி நல்ல பெயர் எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

திரு. டிரம்ப் ராணுவத்தினரின் சம்பளத்தை உயர்த்தி, ஏவுகணைத் தற்காப்பு முறையைச் சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வெளிநாடுகளில் குறிப்பாக ஈராக்கில் ஐ. எஸ் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்க ராணுவத்தினரின் பங்கு அதிகம்.
வெளியுறவுக் கொள்கையில் வலுவான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டும் சில நிகழ்வுகளும் இடம்பெற்றன.வட கொரிய அணுவாயுத விவகாரமும், இஸ்ரேல்-பாலஸ்தீனப் பூசலும் சிக்கலான பிரச்சினைகள்.

வட கொரியாவுக்கு அவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அது தென் கொரியாவுடன் நேரடிப் பேச்சு நடத்த முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அவரது முடிவு, அனைத்துலகக் கண்டனத்துக்கு உள்ளானது. அதே நேரத்தில் மத்திய கிழக்கு அமைதி முயற்சி தொடர்பான விவாதத்துக்குரிய புதிய சாத்தியங்களையும் அது உருவாக்கியுள்ளதாக சில கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குடிநுழைவுக் கொள்கையைப் பொறுத்தவரை, திரு. டிரம்ப் தாம் நினைத்தவற்றை மெல்ல மெல்ல சாதித்துவருகிறார்.
இனவாதி என்றும் அவர் வருணிக்கப்பட்டார்.

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேற எடுத்த முடிவுக்கு அனைத்துலகச் சமூகம் அதிருப்தி தெரிவித்தது.

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் டிரம்ப் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள உலகப் பிரதிநிதிகள் பழகி வருகின்றனர்.
நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்