Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முப்பரிமாண (3D) முறையில் அச்சிடப்பட்ட கருவிழியைப் பெற்ற முதல் ஆடவர்

முப்பரிமாண (3D) முறையில் அச்சிடப்பட்ட கருவிழியைப் பெற்ற முதல் ஆடவர்

வாசிப்புநேரம் -

பிரிட்டிஷ் ஆடவருக்கு முப்பரிமாண (3D) முறையில் அச்சிடப்பட்ட கருவிழி பொருத்தப்பட்டுள்ளது.

அவர், அத்தகைய கண்ணைப் பெறும் முதல் நோயாளி என்று Moorfields கண் மருத்துவமனை தெரிவித்தது.

அச்சிடப்பட்ட கருவிழி , மாற்றுவழிகளில் உருவாக்கப்பட்ட கருவிழிகளை விட இயல்பான கருவிழிகளைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக CNN செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

கருவிழியைப் பொருத்துவதற்கு உடலுக்குள் அதிகக் கருவிகளைச் செலுத்தத் தேவையில்லை என்று கூறப்பட்டது.

முப்பரிமாண (3D) முறையில் அச்சிடுதல் வழி, செயற்கைக் கருவிழிகளை உருவாக்குவதற்கான நேரமும் கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

செயற்கைக் கருவிழிகளை உருவாக்குவதற்கு வழக்கமாக 6 வாரங்கள் எடுக்கும்.

இந்நிலையில், மேலும் அதிகமான நோயாளிகளிடம் சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்படுவதாக CNN சொன்னது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்