Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மனிதத் திசுக்களை கொண்ட இதய மாதிரியை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள்

உலகில் முதன் முறையாக மனிதத் திசுக்களைப் பயன்படுத்தி முப்பரிமாண முறையில் இதய மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. டெல் அவிவில் உள்ள விஞ்ஞானிகள் அந்தச் சாதனையைச் செய்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
மனிதத் திசுக்களை கொண்ட இதய மாதிரியை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள்

(படம்: JACK GUEZ / AFP)

உலகில் முதன் முறையாக மனிதத் திசுக்களைப் பயன்படுத்தி முப்பரிமாண முறையில் இதய மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. டெல் அவிவில் உள்ள விஞ்ஞானிகள் அந்தச் சாதனையைச் செய்துள்ளனர்.

இதயத்தின் செல்கள், இரத்த நாளங்கள், அறைகள் ஆகியவற்றுடன் முதன்முறையாக அத்தகைய முப்பரிமாண மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

இரத்த நாளங்கள் இல்லாமல், சில திசுக்களை மட்டுமே கொண்ட அச்சாக்கம் செய்யும் வகையில்தான் இதுவரை இதய மாதிரிகள் உருவாக்கப்பட்டன.

நோயாளியின் சொந்த செல்களையும், உயிரியல் மூலப் பொருட்களையும் கொண்டு முப்பரிமான இதய மாதிரிகளை உருவாக்குவதன் மூலம் அவருடைய உடல் பொருந்தாத இயத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதில் உள்ள அபாயத்தைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனித இதய மாதிரியின் முப்பரிமாண அச்சாக்கம் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அது ஒரு முயலின் இதயத்தைப் போன்ற அளவில் இருந்தது. பெரிய அளவிலான மனித இதயத்துக்கும் இதே போன்ற தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

வருங்காலத்தில் மருத்துவத்துறையில் பல்வேறு புதிய மாற்றங்களை நிகழத்த இந்த முப்பரிமாண இதய மாதிரி முறை உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்