Images
  • europe numbers (1)
    (படம்: REUTERS/Sergio Perez)

COVID-19: ஒரே நாளில் 400,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று

உலக அளவில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 400,000-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளே கிருமிப்பரவலுக்கான மையப்புள்ளியாக அண்மை வாரங்களில் உருவெடுத்துள்ளன.

கடந்த வாரத்தில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 140,000 பேரிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கிருமிப்பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் பதிவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் கடந்துவிட்டன.

ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸில்தான் ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

நேற்று மட்டும் அங்கு 32,400 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

Top