Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட புதுரகக் கிருமி, உலகின் 50 நாடுகளில் பரவல்: உலகச் சுகாதார நிறுவனம்

பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட "புதிய வகைக் கிருமி", உலகின் 50 நாடுகளிலும், வட்டாரங்களிலும் பரவியிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட புதுரகக் கிருமி, உலகின் 50 நாடுகளில் பரவல்: உலகச் சுகாதார நிறுவனம்

(கோப்புப் படம்: REUTERS/Kham)

பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட "புதிய வகைக் கிருமி", உலகின் 50 நாடுகளிலும், வட்டாரங்களிலும் பரவியிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட "புதிதாக உருமாறிய கிருமி" உலகின் 20 நாடுகளில் பரவியிருக்கிறது.

பெரும்பாலும் உண்மை நிலவரம் அதை விட மோசமாக இருக்கக்கூடும் என்று நிறுவனம் கூறியது.

தற்போது, பிரேசிலின் அமேஸானில் (Amazon) தோன்றிய கொரோனா கிருமியின் 3வது உருமாற்றம் ஆராயப்பட்டு வருகிறது.

கிருமியின் புதிய உருமாற்றங்கள் தடுப்பூசியின் செயல்திறனை மட்டுப்படுத்தலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

உலகின் 10 நாடுகள் மட்டும் 95 விழுக்காட்டுத் தடுப்பூசிகளைப் போட்டிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

நியாயமான வகையில் எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசிகள் உடனே கிடைப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அது சொன்னது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்