Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: கலகத் தடுப்புப் பிரிவிலிருந்து மொத்தமாக விலகிய அதிகாரிகள் 57 பேர்

அமெரிக்கா: கலகத் தடுப்புப் பிரிவிலிருந்து மொத்தமாக விலகிய அதிகாரிகள் 57 பேர்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில், காவல்துறை அதிகாரிகள் 57 பேர் ஒரே நேரத்தில் கலகத் தடுப்புப் பிரிவிலிருந்து விலகினர்.

BBC செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

பஃப்லோ (Buffalo) நகரில், வியாழக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 75 வயது முதியவரை அதிகாரிகள் காயப்படுத்துவதைக் காட்டும் காணொளி இணையத்தில் பகிரப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இருவர் 75 வயது முதியவரைத் தள்ளுகின்றனர். அவர், தடுமாறிக் கீழே விழுந்து தலையில் காயமடைந்தது காணொளியில் தென்படுகிறது.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று BBC கூறியது.

முதியவரைத் தள்ளிக் காயப்படுத்திய அதிகாரிகள் இருவரும் சம்பளமில்லா விடுப்பில் விடுவிக்கப்பட்டனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த அதிகாரிகளுடன் பணியாற்றிய அனைவரும் அவசரக் கால நடவடிக்கைக் குழுவிலிருந்து வெளியேறினர்.

இருப்பினும், அவர்கள் காவல்துறையிலிருந்து வெளியேறவில்லை என்று உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்தது.


  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்