Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெக்சிக்கோ: ரகசியமாகப் புதைக்கப்பட்ட 59 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

மெக்சிக்கோவில் ரகசியமாகப் புதைக்கப்பட்ட 59 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

மெக்சிக்கோவில் ரகசியமாகப் புதைக்கப்பட்ட 59 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாவாடோ (Guanajuato) மாநிலத்தில் அவை கண்டெடுக்கப்பட்டன.

புதைக்கப்பட்டவர்கள் போதைப்பொருள் பிரச்சினைகளுடன் தொடர்புடையவர்கள் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

சடலங்களில் குறைந்தது 10 பெண்களுடையது என்று தெரிவிக்கப்பட்டது.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளையர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்சிகோவில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன.

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் குவானாவாடோ (Guanajuato) மாநிலத்தில் 2,250 கொலைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது கடந்த ஆண்டை விட 25 விழுக்காடு அதிகம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்