Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: 6 வயது இந்தியச் சிறுமி வெப்பம் தாக்கி மரணம்

மெக்சிகோ-அமெரிக்க எல்லையைக் கடந்தபோது ஓர் ஆறு வயது இந்தியச் சிறுமி வெப்பத்தின் தாக்கத்தால் மாண்டார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: 6 வயது இந்தியச் சிறுமி வெப்பம் தாக்கி மரணம்

படம்: Reuters

மெக்சிகோ-அமெரிக்க எல்லையைக் கடந்தபோது ஓர் ஆறு வயது இந்தியச் சிறுமி வெப்பத்தின் தாக்கத்தால் மாண்டார்.

அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக குருபிரிட் கோர் (Gurupreet Kaur) என்ற அந்தச் சிறுமியும் அவருடைய தாயாரும் மேலும் 5 இந்தியக் குடியேறிகளுடன் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

வழிகாட்டி வந்த கடத்தல்காரர்கள் ஜூன் 11ஆம் தேதியன்று அவர்களை ஒதுக்குப்புறமான எல்லைப் பகுதியில் இறக்கிவிட்டனர்.

அமெரிக்காவின் தென்மேற்கு எல்லையில் இருக்கும் அரிஸோனா மாநிலத்திற்கு அருகேயுள்ள பகுதி அது.

வெப்பநிலை சுமார் 42 டிகிரி செல்சியஸ் வரை நிலவிய இடத்தில் குடியேறிகளிடம் தண்ணீர் கொஞ்சமும் இல்லை.

குருபிரிட்டின் அம்மா தண்ணீர் தேடக் குடியேறிகளிடமிருந்து பிரிந்து சென்றார்.

மற்றொரு பெண்ணுடன் மகளை விட்டுச்சென்றார் குருபிரிட்டின் அம்மா.

அடுத்த நாள் காலை குருபிரிட்டின் அம்மாவின் கால் தடங்களைப் பின்தொடர்ந்த எல்லை அதிகாரி அவரைப் பிடித்து விசாரணை செய்தார்.

விசாரணையில் குருபிரிட்டின் அம்மா மகளை விட்டுச் சென்றது தெரியவந்தது.

4 மணி நேரத் தேடலுக்குப் பிறகு குருபிரிட் அமெரிக்க எல்லையிலிருந்து சுமார் 1.6 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டார்.

குருபிரிட் இறந்துவிட்டதை எல்லை அதிகாரிகள் அறிந்தனர்.

கடந்த மாத இறுதிக்குள் அரிஸோனாவின் தெற்குப் பகுதி வழியாக எல்லையைக் கடக்க முயன்றவர்களில் 58 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்