Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இடமாற்றத்தால் மாண்ட 7 அருகிவரும் காண்டாமிருகங்கள்

கென்யாவின் புதிய பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்ட அருகிவரும் காண்டாமிருகங்களில் 7 மாண்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
இடமாற்றத்தால் மாண்ட 7 அருகிவரும் காண்டாமிருகங்கள்

(படம்: AFP)

கென்யாவின் புதிய பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்ட அருகிவரும் காண்டாமிருகங்களில் 7 மாண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

கென்யா வனவிலங்கு சேவை காண்டாமிருகங்களின் மரணம்குறித்து வேறெந்தத் தகவலையும் வெளியிட மறுத்துவிட்டது.

14 அருகிவரும் காண்டாமிருகங்கள் கென்யாவின் புதிய பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்டன.

அதில் பாதி மாண்டது வழக்கத்துக்கு மாறானது எனக் கருதப்படுகிறது.

அந்தக் காண்டாமிருகங்கள் இடம் மாற்றப்படும்போது அவற்றை நீண்ட பயணத்திற்காகத் தூங்க வைப்பது வழக்கம் என்றும் அதன்பின் அவற்றை மீண்டும் விழிக்கச் செய்வது ஆபத்தானது என்றும் கூறப்படுகிறது.

காண்டாமிருகங்களின் மரணம்குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வனவிலங்குப் பாதுகாப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்