Images
  • 77
    (படம்: Reuters)

யாருடைய உதவியுமின்றி படகில் உலகைச் சுற்றிவந்த 77 வயது மாது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை பிரிட்டனைச் சேர்ந்த 77 வயது மாது நிரூபித்துள்ளார்.

ஜீன் சாக்ரடீஸ் (Jeanne Socrates) தனியாக, இடைநில்லாது, யாருடைய உதவியும் இன்றி உலகைச் சுற்றிவந்த ஆக வயதான படகோட்டி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

330 நாள்களைத் தனியே கடலில் கழித்த அவர் கனடாவின் விக்டோரியா துறைமுகத்தைச் சென்றடைந்தார்.

அவரது வெற்றிப்பயணம் பல சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது.

படகின் ரேடார் தொடர்புக் கருவி, திரைச்சீலை போன்றவை பழுதாயின; ஒருமுறை சூறாவளி நேரத்தில் படகில் பொருத்தப்பட்டிருந்த சூரிய சக்தித் தகடுகள் கடலில் விழுந்துவிட்டன.

தடைகளைத் தாண்டி சாதனை படைத்த அந்தப் பெண்மணி, சென்ற ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி புறப்பட்டு, இம்மாதம் 7ஆம் தேதி தனது சாதனைப் பயணத்தை நிறைவுசெய்தார். 

Top