Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தடுப்பூசித் தகுதியை 9 மாதங்களுக்கு வைத்திருங்கள் - ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் பரிந்துரை

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயணம் செய்வதற்குத் தடுப்பூசித் தகுதியை 9 மாதத்திற்கு வைத்திருக்கும்படி ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் பரிந்துரைக்கிறது.

வாசிப்புநேரம் -
தடுப்பூசித் தகுதியை 9 மாதங்களுக்கு வைத்திருங்கள் - ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் பரிந்துரை

கோப்புப் படம்: Ap images

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயணம் செய்வதற்குத் தடுப்பூசித் தகுதியை 9 மாதத்திற்கு வைத்திருக்கும்படி ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் பரிந்துரைக்கிறது.

9 மாதங்களுக்குப் பிறகு, கூடுதல் booster தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அது கூறியது.

அதன் வழி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவோர், தங்களது தடுப்பூசிச் சான்றிதழ் காலாவதி ஆகியதும் booster தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிவரும்.

அந்த வட்டாரத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவில் ஒவ்வொரு 2 நாளும், சுமார் ஒரு மில்லியன் பேருக்குக் கிருமி தொற்றுகிறது.

உலக அளவில் பதிவாகும் புதிய சம்பவங்களில் அது சுமார் மூன்றில் 2 பங்கு எனத் தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்