Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'என்னால் இயலும் வரை, நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க விரும்புகிறேன்' - 100 வயதை நெருங்கும் மருத்துவர்

100 வயதை நெருங்கினாலும்  மருத்துவச் சேவையில் ஈடுபட்டுவருகிறார் ஹங்கேரியில் (Hungary) ஒரு மருத்துவர். 

வாசிப்புநேரம் -
'என்னால் இயலும் வரை, நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க விரும்புகிறேன்' - 100 வயதை நெருங்கும் மருத்துவர்

படம்: ATTILA KISBENEDEK / AFP

100 வயதை நெருங்கினாலும் மருத்துவச் சேவையில் ஈடுபட்டுவருகிறார் ஹங்கேரியில் (Hungary) ஒரு மருத்துவர்.

1923-இல் பிறந்த 97 வயது டாக்டர் கோர்மெண்டி (Kormendi), ஜெர்மனியின் Nazi படை நடத்திய உடலுழைப்பு முகாம்களில் பணிபுரிந்ததும் உண்டு.

1950-இல் மருத்துவச் சேவையைத் தொடங்கினார்
டாக்டர் கோர்மெண்டி.

1989- இல் ஓய்வு பெற்று விட்டாலும், சேவையை இன்னும் தொடர்கிறார். தற்போது மருத்துவப் பணியில் ஈடுபடும் ஆக மூத்தவர் என்று அவர் கருதப்படுகிறார்.

டாக்டர் கோர்மெண்டி, சுமார் 300 பேருக்குச் சிகிச்சை அளித்து வருகிறார்.

அவர்களில் ஒருவர், 70 வயதுப் பாட்டி. மிகச் சிறு வயதில் இருந்தே அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார் டாக்டர் கோர்மெண்டி.

"இது எனக்கு விருப்பமான வேலை. இயலும் வரை, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க விரும்புகிறேன்." என்று சொல்கிறார் டாக்டர் கோர்மெண்டி.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்