Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தொள தொள உடைக்கு மாறும் உக்ரேனிய விமான நிறுவனச் சிப்பந்திகள்

உக்ரேனிய (Ukraine) விமான நிறுவனமான SkyUp ஏர்லைன்ஸ், குட்டைப் பாவாடைகளையும் குதிகால் காலணிகளையும் சீருடையிலிருந்து நீக்குகிறது.

வாசிப்புநேரம் -
தொள தொள உடைக்கு மாறும் உக்ரேனிய விமான நிறுவனச் சிப்பந்திகள்

படம்: REUTERS/Gleb Garanich

உக்ரேனிய (Ukraine) விமான நிறுவனமான SkyUp ஏர்லைன்ஸ், குட்டைப் பாவாடைகளையும் குதிகால் காலணிகளையும் சீருடையிலிருந்து நீக்குகிறது.

அதற்கு பதிலாக, சிப்பந்திகள், உடலை இறுக்கிப் பிடிக்காத வசதியான உடைகளை அணிவார்கள்.

விமானங்கள் அசம்பாவிதத்தைச் சந்திக்கும் போதோ, தண்ணீரில் தரையிறங்கும் போதோ, சிப்பந்திகளின் கூர்மையான காலணிகள் ஏணியைச் சேதப்படுத்தக்கூடும் என்ற கவலை நிலவியது.

மேலும் நீந்தும் சூழலுக்கு அவர்களது உடை ஏற்றதல்ல என்ற குறையும் இருந்தது.

சில நேரங்களில் விமானத்தில் உட்கார ஒரு நிமிட ஓய்வு கூடக் கிடைப்பதில்லை என்று 7 ஆண்டுகளாக நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் மூத்த விமானப் பணிப்பெண் ஒருவர் கூறினார்.

மணிக்கணக்காகக் குதிகால் காலணிகளை அணிந்து பணிசெய்வதால், எப்போது தனது வீங்கிய கால்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்று அவர் ஏங்குவாராம்.
நிறுவனம், சீருடை பற்றி ஊழியர்களிடமிருந்து கருத்துகளைச் சேகரித்தபோது, குதிகால் காலணிகளுக்கும் குட்டைப் பாவாடைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தது.

தற்போது, பெண்களுக்கான புதிய SkyUp சீருடை, வெள்ளை நைக்கி (Nike) காலணிகளும், தொள தொள ஆரஞ்சு நிற உடையும்...

புதிய சீருடை இம்மாதம் 22 தேதியன்று அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்