Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முகக்கவசம் அணிவதால் சுவாசிக்கும் உயிர்வாயு அளவு குறையாது என்பதை 35 கிலோமீட்டர் ஓடி நிரூபித்த மருத்துவர்!

இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், முகக்கவசம் அணிவதால் நாம் சுவாசிக்கும் பிராண வாயுவின் (Oxygen) அளவு குறையாது என்பதை நிரூபிக்க முனைந்தார். 

வாசிப்புநேரம் -

இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், முகக்கவசம் அணிவதால் நாம் சுவாசிக்கும் பிராண வாயுவின் (Oxygen) அளவு குறையாது என்பதை நிரூபிக்க முனைந்தார்.

அதைச் செய்ய மருத்துவர் டாம் லொட்டன் (Tom Lawton) முகக்கவசம் அணிந்தவாறு 22 மைல்கள் (சுமார் 35.4 கிலோமீட்டர்) ஓடியுள்ளார் !

ஓடிக்கொண்டிருக்கும்போது, ரத்தத்தில் கலந்துள்ள உயிர் வாயுவின் அளவைக் கணக்கிடும் 'பல்ஸ் ஆக்சிமீட்டர்' (pulse oximeter) என்ற சிறுகருவியைத் தமது விரலில் பொருத்தியிருந்தார்.

ஓடும்போது முகக்கவசத்தை ஒருபோதும் அகற்றவே இல்லை! மேலும் என் ரத்தத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு 98 விழுக்காட்டை விட்டு இறங்கவே இல்லை

என்று தமது Twitter பதிவில் விளக்கினார்.

சிலர் முகக்கவசங்கள் அணிவதனால் அவர்கள் சுவாசிக்கும் பிராணவாயுவின் அளவு குறைந்துள்ளது என்ற கருத்தை இணையத்தில் பதிவு செய்தது எனக்கு எரிச்சலூட்டியது.

என்று கூறினார் டாக்டர் லொட்டன்.

அது தவறான கருத்து என்பதை நிரூபிக்கவே தாம் முகக்கவசம் அணிந்து ஓடியதாக அவர் குறிப்பிட்டார்.

முகக்கவசம் சற்று வசதிக்குறைவை ஏற்படுத்துகிறது என்பது மட்டுமே உண்மை என்றார் அவர்.

இருப்பினும், நோய்த்தொற்றைத் தடுக்க முகக்கவசங்கள் அணிவதோடு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்தல், தனிமைப்படுத்தும் உத்தரவுக்கு இணங்கி நடத்தல்-போன்றவற்றைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்