Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: அலபாமா மாநிலத்தில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கும் மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது

அமெரிக்காவின் அலபாமா மாநில செனட் சபை, கருக்கலைப்புக்குத் தடை விதிக்கும் மசோதாவை ஏற்றுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: அலபாமா மாநிலத்தில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கும் மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது

(படம்:Pixabay)

அமெரிக்காவின் அலபாமா மாநில செனட் சபை, கருக்கலைப்புக்குத் தடை விதிக்கும் மசோதாவை ஏற்றுக்கொண்டுள்ளது.

கர்ப்பிணியின் உடல்நலத்தைப் பாதுகாக்க செய்யப்படும் கருக்கலைப்புக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

அது சட்டமாக அமல்படுத்தப்பட்டால், பாலியல் பலாத்காரம் மூலம் கருவுறும் பெண்களும் கருக்கலைப்பு செய்துகொள்ள தடை விதிக்கப்படும்.

மாநில செனட் சபையில் அந்த மசோதாவுக்கு ஆதரவாக 25 பேரும் எதிராக 6 பேரும் வாக்களித்தனர்.

அந்த மசோதாவுக்கு ஆளுநர் கெ ஐவி (Kay Ivey) ஒப்புதல் அளிக்கவேண்டும்.

அவர் கருக்கலைப்புக்கு எதிரான கருத்து கொண்டவர்.

அந்தச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதற்கு சில மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்