Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

3 மில்லியன் யூரோவுடன் வாகனம் காணாமல்போனது- ஓட்டுநர் கைது

பிரான்ஸில் 3 மில்லியன் யூரோ பணத்துடன் வேன் ஒன்று காணாமல்போனதன் தொடர்பாக வாகன ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வாசிப்புநேரம் -

பிரான்ஸில் 3 மில்லியன் யூரோ பணத்துடன் வேன் ஒன்று காணாமல்போனதன் தொடர்பாக வாகன ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் திங்கட்கிழமை (பிப்ரவரி 11) காலை 6 மணியளவில் நடந்தது.

ஆவ்பர்வில்லியர்ஸ் (Aubervilliers) என்ற நகரிலுள்ள Western Union கிளையில் வழக்கம்போல பணத்தைக் கொண்டு சேர்த்திருக்கின்றனர் ஊழியர்கள்.

இருவர் பணத்தில் ஒரு பங்கைக் கட்டடத்தினுள் கொண்டு சென்றிருக்கின்றனர்.

அவர்கள் வெளியே திரும்பியபோது மீதமிருந்த 3 மில்லியன் யூரோ பணத்தையும் வாகன ஓட்டுநரையும் காணவில்லை.

சற்றுத் தொலைவில் வாகனம் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிடைத்த துப்பின் மூலமாகக் காவல்துறை அதிகாரிகள் அன்று மாலை சந்தேக நபரான எட்ரியன் டர்பஸ்ஸைக் (Adrien Derbez) கைதுசெய்தனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 1.5 மில்லியன் யூரோ மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்