Images
  • US troops
    படம்: Zoe Garbarino/U.S. Army via Reuters

ஆஃப்கானிஸ்தானிலிருந்து துருப்புகளை மீட்கத் தொடங்கியது அமெரிக்கா

அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தானில் இருந்து அதன் துருப்புகளை மீட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புகள் செயல்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கத் துருப்பினரை அதிகாரப்பூர்வமாக மீட்டுக்கொள்ளும் பணிகள் இம்மாதம் முதல் தொடக்கம் கண்டுள்ளன.

எஞ்சியுள்ள 2,500 அமெரிக்கத் துருப்பினர் இவ்வாண்டு செப்டம்பர் 11ம் தேதிக்குள் நாடு திரும்பவுள்ளனர். அந்நாள், 2001ஆம் ஆண்டில் அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் 20ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாள்.

எனினும், மீட்டுக்கொள்ளப்படும் அமெரிக்கத் துருப்பினர் மீது, தலிபான்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அக்கறை அதிகரித்துவருகிறது. 

Top