Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தலிபானுக்கு ஆதரவளித்துப் பெண்கள் ஆர்ப்பாட்டம்

பாலினப் பாகுபாடு குறித்த தலிபானின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பெண்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

பாலினப் பாகுபாடு குறித்த தலிபானின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பெண்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 பெண்கள் பங்கேற்றனர்.

அவர்களில் ஒருசிலர் முகத்தையும் உடலையும் முழுமையாக மறைக்கும் நீலவண்ண burqa எனும் மேலாடையை அணிந்திருந்தனர்.

மற்றுஞ்சிலர் முகத்தை முழுமையாக மூடி, கண்களை மட்டும் காட்டும் கறுப்பு niqab என்னும் முகத்திரையை அணிந்திருந்தனர்.

தலிபான் கொடிகள் வைக்கப்பட்டிருந்த அந்த அரங்கில் பேச்சாளர்கள், அண்மை நாள்களாகத் தலிபானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களைச் சாடினர்.

அவர்கள் தலிபான் அமைத்த புதிய இடைக்கால அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் தற்காத்துப் பேசினர்.

1996இலிருந்து 5 ஆண்டுக்குத் தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது, பெண்களின் உரிமை கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகக் குறைகூறப்பட்டது.

அப்போது burqa அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் பெண்கள் இம்முறை niqab அல்லது abaya அணியலாம் என்றும் பல்கலைக்கழகத்திற்குச் செல்லலாம் என்றும் கூறப்பட்டது.

பல்கலைகளில் வகுப்புகள் பாலின முறையில் பிரிக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
-AFP/ad 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்