Images
  • afghan
    (படம்: REUTERS/Stringer)

ஆப்கானிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டாலர் வழங்க G20 தலைவர்கள் உறுதி

ஆப்கானிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டாலர் நிவாரண நிதி வழங்க, G20 தலைவர்கள் உறுதிகூறியுள்ளனர்.

மனிதநேய நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் அந்த நிவாரண நிதி வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டது.

அத்துடன், தலிபான் அமைப்புடன் தொடர்பில் இருப்பதன் அவசியத்தை இத்தாலி வலியுறுத்தியது.

அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியுடன் தலிபான் அமைப்பு முதன்முறையாக நேருக்கு நேர் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

கடந்த வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்தப் பேச்சுவார்த்தை கத்தாரில் நடைபெற்றது.

தலிபான் அமைப்பு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கான அனைத்துலக நிவாரண உதவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டுச் சொத்துகளும் முடக்கப்பட்டன.  

Top