Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆப்கானிஸ்தான் சரிவை நோக்கிச் செல்கிறது - சுவீடன், பாகிஸ்தான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சுவீடனும், பாகிஸ்தானும் எச்சரித்துள்ளன.

வாசிப்புநேரம் -


ஆப்கானிஸ்தான் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சுவீடனும், பாகிஸ்தானும் எச்சரித்துள்ளன.

அனைத்துலக் சமூகம் விரைந்து செயல்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் சீக்கிரமாகவே நிலைகுலைந்துவிடும் என்று அவை கூறின.

ஆப்கானிஸ்தானின் அவலச் சூழல் பயங்கரவாதக் குழுக்களின் கை ஓங்குவதற்கு வழியமைக்கலாம் என்று சுவீடனின் மேம்பாட்டு அமைச்சர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்

தலிபான்களுக்கு சுவீடன் நிதியுதவி வழங்காது என்று கூறிய அவர் ஆப்கானிஸ்தான் குடிமைச் சமூகக் குழுக்கள்மூலம் மனிதநேய உதவிகளை அதிககரிக்கப்போவதாகச் சொன்னார்

மானிடப் பேரழிவைத் தடுக்க தலிபான்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது மட்டுமே வழி என்று பாகிஸ்தான் தகவல் அமைச்சு கூறியது.

செஞ்சிலுவைச் சங்கமும் அதே கருத்தை வலியுறுத்தியது.

தற்காலிகமாக மனிதநேய நெருக்கடியைச் சமாளிப்பது மட்டுமே உதவிக் குழுக்களால் சாத்தியமாகும். அனைத்துலகச் சமூகம் தலிபான்களுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்