Images
  • air canz
    (படம்: AFP)

ஆக மோசமான விபத்தில் இருந்து தப்பிய ஏர் கனடா விமானம்

ஏர் கனடா விமானம் ஒன்று கடந்த ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்காமல் விமானம் புறப்படும் இடத்தில் தரையிறங்கி பெரும் விபத்தை ஏற்படுத்த இருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் நான்கு விமானங்கள் புறப்படத் தயார் நிலையில் இருந்த போது ஏர் கனடா விமானம் 140 பயணிகளுடன் தரையிறங்கத் தயாரானது.

ஏர் கனடா விமானிக்குத் தவறான தகவல் கொடுத்த விமான நிலைய ஊழியர் விமானத்தை வேறுபாதையில் தரையிறங்குமாறு கேட்டுக்கொண்டார்.

வேறுபாதையில் தரையிறங்கும் போது சற்று சுதாரித்துக் கொண்ட விமானி விமான நிலைய ஊழியரிடம் மற்றொரு முறையும் சரியா என்று கேட்டார்.

"தவறான ஓடுபாதை, தரையிறங்க வேண்டாம்" என்று பதில் வர விமானி பதற்றப்படாமல் சாதுர்யமாக விமானத்தை வேறு பாதைக்குத் திருப்பினார்.

அப்படி தவறாகத் தரையிறங்கியிருந்தால் அது வரலாற்றில் ஆக மோசமான விமான விபத்தாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Top