Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நடுவானில் ஆட்டம் கண்ட ஏர் கனடா விமானம் - 35 பயணிகள் காயம்

கனடாவின் வான்கூவரில் (Vancouver) இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் பறந்துகொண்டிருந்த ஏர் கனடா விமானம் நடுவானில் ஆட்டம் கண்டதைத் தொடர்ந்து விமானம் அமெரிக்காவின் ஹவாயி தீவில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.

வாசிப்புநேரம் -
நடுவானில் ஆட்டம் கண்ட ஏர் கனடா விமானம் - 35 பயணிகள் காயம்

(படம்: Reuters)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கனடாவின் வான்கூவரில் (Vancouver) இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் பறந்துகொண்டிருந்த ஏர் கனடா விமானம் நடுவானில் ஆட்டம் கண்டதைத் தொடர்ந்து விமானம் அமெரிக்காவின் ஹவாயி தீவில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.

சிங்கப்பூர் நேரப்படி பின்னிரவு 12:45 மணிக்கு அந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் 269 பயணிகளும் 15 விமானச் சிப்பந்திகளும் இருந்தனர்.

விமானம் ஆட்டம் கண்டதில் 35 பயணிகளுக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம் பறக்க தொடங்கிய 2 மணிநேரத்திற்குப் பிறகு பொருள்கள் திடீரென பறக்கத் தொடங்கியதாகவும், பாதுகாப்பு வார் அணியாத பயணிகள் விமானத்தின் மேல் கூரையில் மோதிக்கொண்டதாகவும் விமானப் பயணி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல், உணவுச் சேவைகள் வழங்கப்படுவதாகவும், தற்போது மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் ஏர் கனடா விமான நிறுவனம் தெரிவித்த

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்