Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக நாடுகள் பாதுகாப்பான விமானப் பயண அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் : ஐக்கிய நாட்டு நிறுவனம்

உலக நாடுகள் பாதுகாப்பான விமானப் பயண அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் : ஐக்கிய நாட்டு நிறுவனம்

வாசிப்புநேரம் -
உலக நாடுகள் பாதுகாப்பான விமானப் பயண அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் : ஐக்கிய நாட்டு நிறுவனம்

கோப்புப் படம்: Reuters

கொள்ளை நோய் பரவிவரும் சூழலில் உலக நாடுகள் பாதுகாப்பான விமானப் பயண அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பணிக்குழு தெரிவித்துள்ளது.

விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், உலக நாடுகள் இணைந்து ஒரே பாதுகாப்பு அணுகுமுறையைப் பின்பற்றுவது சிறந்தது என்றும் பணிக்குழு கூறியது.

விமானப் பயணங்களின் போது பயணிகள், சிப்பந்திகள், மற்ற ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரின் உடல் நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விமானப் போக்குவரத்தைத் தொடங்க அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வரும் திங்கள்கிழமை அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு
மறுஆய்வு செய்யவிருக்கிறது.

பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கினால் மக்கள் மீண்டும் விமானப் பயணங்களை பயமின்றித் தொடங்குவர் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்