Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

A380 ரக விமான உற்பத்தியை நிறுத்திக்கொள்ளும் Airbus

A380 ரக விமானங்களின் உற்பத்தியை நிறுத்திக்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக Airbus நிறுவனம் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

A380 ரக விமானங்களின் உற்பத்தியை நிறுத்திக்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக Airbus நிறுவனம் அறிவித்துள்ளது.

சில ஆண்டுகாலம் அவற்றின் விற்பனையில் ஏற்பட்ட சரிவு அதற்குக் காரணம்.

உலகின் ஆகப் பெரிய விமானமான A380, ஈரடுக்கு மாடியுடன்
544 பேர் அமர்வதற்கான வசதியையும் கொண்டுள்ளது.

Boeing 747 ரக விமானத்துக்கு இணையாக அது வடிவமைக்கப்பட்டது.

ஆனால் சிறிய வடிவில் அறிமுகம் காணும் புதிய தலைமுறை விமானங்கள் பிரபலமாகி வருவதால் A380 ரக விமானங்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் Airbus நிறுவனம் மேலும் 17 விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.

அவற்றில் 14, Emirates நிறுவனத்துக்குச் சொந்தமானவை.

மற்ற 3, ஜப்பானிய விமான நிறுவனமான ANAக்குச் சொந்தமானவை.

Airbus நிறுவனத்தின் கடைசி விமானத்துக்கான விற்பனை 2021ஆம் ஆண்டில் இடம்பெறும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்