Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகளாவிய விமான நிறுவனங்கள், வங்கிகளின் இணையச்சேவைகள், பாதிப்புக்குப்பின் இயல்புநிலைக்குத் திரும்பின

இணையச் சேவை வழங்கும் Akamai Technologies அமைப்பின் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால், உலகின் பல முக்கியமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டன.

வாசிப்புநேரம் -
உலகளாவிய விமான நிறுவனங்கள், வங்கிகளின் இணையச்சேவைகள், பாதிப்புக்குப்பின் இயல்புநிலைக்குத் திரும்பின

கோப்புப்படம்: Reuters

இணையச் சேவை வழங்கும் Akamai Technologies அமைப்பின் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால், உலகின் பல முக்கியமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டன.

இம்மாதத்தில் உலக அளவில் பெரிய வலைத்தளங்கள் முடங்கிப்போனது இது இரண்டாவது முறை.

சுமார் ஒரு மணி நேரம்வரை நீடித்த பிரச்சினைக்குக் காரணம், Domain name system (DNS) சேவையில் ஏற்பட்ட பிழை என்று கண்டறியப்பட்டது.

தற்போது பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், வலைத்தளங்கள் வழக்க நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் Akamai அதிகாரிகள் தெரிவித்தனர்.

அது, இணையத் தாக்குதல் அல்ல என்பதை அவர்கள் தெளிவுபடுத்தினர்.

மீண்டும் இத்தகைய கோளாறு நேராமலிருக்கத் தேவையான மென்பொருள் மேம்பாட்டுப் பணிகளைப் பரிசீலித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Akamai Technologies மேகக் கணிமை நிறுவனத்தின் கட்டமைப்பை, விமான நிறுவனங்கள், வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பயன்படுத்தி வருகின்றன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்