Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கப் பெண்களிடைய வெகுவாக அதிகரித்துவரும் மதுபான மரணங்கள்

அமெரிக்காவில் மிதமிஞ்சிய அளவில் மதுபானங்களை அருந்தும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
அமெரிக்கப் பெண்களிடைய வெகுவாக அதிகரித்துவரும் மதுபான மரணங்கள்

படம்: Giovanna Gomes/Unsplash

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

அமெரிக்காவில் மிதமிஞ்சிய அளவில் மதுபானங்களை அருந்தும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதனால் அவர்களிடையே ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. மரணச் சான்றிதழ்களை ஆய்வு செய்த பின்னர், தவறான மதுப்பழக்கம் குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்கத் தேசியக் கல்விக் கழகம் அந்த விவரங்களை  வெளியிட்டது.

1999ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட மரணச் சம்பவங்கள் ஆராயப்பட்டன. அதில் மதுபானம் தொடர்பான மரணங்கள் 51 விழுக்காடு அதிகரித்தது.

பெண்களிடைய அது 85 விழுக்காடு அதிகரித்தது.

ஆண்களிடையே 35 விழுக்காடு அதிகரித்தது.

இருப்பினும் பெண்களை விட ஆண்களின் உயிரை மதுபானம் அதிகமாகப் பறித்துள்ளது.

மதுபானத்தால் மாண்ட பெண்களின் எண்ணிக்கை

1999ஆம் ஆண்டு: 7,662

2017ஆம் ஆண்டு: 18,072

மதுபானத்தால் மாண்ட ஆண்களின் எண்ணிக்கை:

1999ஆம் ஆண்டு: 35,914

2017ஆம் ஆண்டு: 72,558


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்