Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கைகுலுக்க மறுத்த பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு

ஃபிரான்ஸில் குடியுரிமைச் சடங்கின்போது மூத்த அதிகாரி ஒருவருடன் கைகுலுக்க மறுத்த பெண்ணுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதை ஃபிரான்ஸ் நீதிமன்றம் தற்காத்து பேசியுள்ளது.

வாசிப்புநேரம் -
கைகுலுக்க மறுத்த பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு

(படம்: Reuters)

ஃபிரான்ஸில் குடியுரிமைச் சடங்கின்போது மூத்த அதிகாரி ஒருவருடன் கைகுலுக்க மறுத்த பெண்ணுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதை ஃபிரான்ஸ் நீதிமன்றம் தற்காத்து பேசியுள்ளது.

அல்ஜீரியாவைச் சேர்ந்த அவர் 2010ஆம் ஆண்டு ஃபிரஞ்சுக் குடிமகனை மணந்தார். அதனையடுத்து, 2016-ஆம் ஆண்டு குடியுரிமைக்கு விண்ணப்பத்தார்.

அது நிராகரிக்கப்பட்டதால், அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். தமது சமய நம்பிக்கைகளின் காரணமாக, ஓர் ஆணிடம் தாம் கைகுலுக்க இயலவில்லை என்று அந்தப் பெண் தெரிவித்தார்.

ஆனால் ஃபிரஞ்சு நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும், குடியுரிமை மறுத்ததை, அது தற்காத்துப் பேசியுள்ளது. அவர் ஃபிரஞ்சு சமூகத்துக்குள் ஒன்றிணைய முடியாது என்பதால், குடியுரிமை அளிக்க இயலாது என்று நீதிமன்றம் சொன்னது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்