Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அன்பு பறிபோனதாய்க் குற்றஞ்சாட்டி, 1 மில்லியன் வெள்ளி பெற்ற ஆடவர்

அமெரிக்காவின் நார்த் கரோலைனா மாநிலத்தில் விநோதமான ஒரு வழக்கு.

வாசிப்புநேரம் -
அன்பு பறிபோனதாய்க் குற்றஞ்சாட்டி, 1 மில்லியன் வெள்ளி பெற்ற ஆடவர்

( படம்: AFP )

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்காவின் நார்த் கரோலைனா மாநிலத்தில் விநோதமான ஒரு வழக்கு.

கெவின் ஹோவார்ட் என்பவர் தம் மனைவியின் காதலர் மீது 'அன்பைப் பறித்ததாய்க்' குற்றஞ்சாட்டி 750,000 டாலர் (1 மில்லியன் வெள்ளி) பெற்றிருக்கிறார்.

"புறக்கணித்து அன்பைப் பறித்தது" என்ற சட்டத்தின் கீழ் கெவின் மனைவியின் காதலர் மீது குற்றம் சுமத்தியிருந்தார். அந்தச் சட்டம் அமெரிக்காவின் வெகு சில மாநிலங்களில் மட்டுமே இன்னமும் நடப்பில் உள்ளது.

திருமண பந்தத்தைக் கலைக்க, வேண்டுமென்றே தலையிட்டு தம்மிடம் செலுத்தப்பட்டு வந்த அன்பைக் குலைத்ததாக சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தலாம்.

பெரும்பாலும் மணமுறிவு கோருவோர் இந்தச் சட்டத்தின் கீழ், அதற்குக் காரணமான மூன்றாம் தரப்பு மீது இத்தகைய குற்றத்தைச் சுமத்துவதுண்டு.

சட்டத்தைப் பொறுத்தவரை, திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு பரிமாறிக் கொண்டதையும், பின் மற்றொரு தரப்பின் குறுக்கீட்டால் அந்த அன்பு பறிபோனது என்பதையும் நிரூபிக்கவேண்டும் என்று வழக்குரைஞர்கள் கூறினர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்