Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: அனைத்துப் பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெறுவர்

அமெரிக்காவில் வரும் 19-ஆம் தேதிமுதல் அனைத்து பெரியவர்களும் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தகுதி பெற்றிருப்பார்கள் என்று  அந்நாட்டு அதிபர்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் வரும் 19-ஆம் தேதிமுதல் அனைத்து பெரியவர்களும் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தகுதி பெற்றிருப்பார்கள் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாகத் திட்டமிட்டதைவிட 2 வாரத்துக்கு முன்கூட்டியே அந்த இலக்கை எட்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. திரு பைடன் பதவி ஏற்று முதல் 100 நாள்களுக்குள் 150 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கர்களுக்கு போட வேண்டும் என்பது அவரின் இலக்காக இருந்தது.

இலக்கை முன்னதாகவே எட்டிவிட்டபோதும் புதிய வகைக் கிருமிப் பரவல் சூழலால் இன்னமும் அபாயகரமான நிலையில் இருப்பதாக அதிபர் எச்சரித்தார்.

 இப்போதைக்கு 18 வயதுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கே அங்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்