Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Amazon, Facebook உரிமையாளர்களின் சொத்து மதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது

அமெரிக்கப் பணக்காரர்கள் பலரின் சொத்து மதிப்பு, COVID-19 கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் சராசரியாக 15 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. 

வாசிப்புநேரம் -
Amazon, Facebook உரிமையாளர்களின் சொத்து மதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

அமெரிக்கப் பணக்காரர்கள் பலரின் சொத்து மதிப்பு, COVID-19 கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் சராசரியாக 15 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

Amazon நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), Facebook தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg) ஆகியோரின் சொத்து மதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சுமார் 600 பணக்காரர்களை வைத்து Americans for Tax Fairness, Institute for Policy Studies Program for Inequality ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வில் அந்த விவரங்கள் தெரியவந்தன.

அவர்களது தொழில்நுட்பப் பங்குகளின் விலை அதிகரிப்பு அதற்குக் காரணம்.

மார்ச் 18க்கும் மே 19க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்களது சொத்துக்களின் நிகர மதிப்பு 434 பில்லியன் டாலர் அதிகரித்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெசோஸின் சொத்து மதிப்பு 30 விழுக்காடு அதிகரித்து, 147 பில்லியன் டாலரானது.

ஸக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 45 விழுக்காடு அதிகரித்து 80 பில்லியன் ஆனது.

உலக மக்களில் 90 விழுக்காட்டினர் வீடுகளில் தங்கியிருப்பதால் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் சமூக ஊடக நிறுவனங்களும், இணைய விற்பனைத் தளங்களும் நல்ல லாபம் பார்த்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்