Images
  • Amazon
    படம்: REUTERS

இந்துக் கடவுள்களின் சித்திரங்களைக் கொண்ட கழிப்பறைத் தொட்டி உறை, காலணிகள் - சர்ச்சையில் சிக்கிய Amazon

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

இந்திய இணையவாசிகள் இந்துக் கடவுள்களின் சித்திரங்களைக் கொண்ட கழிப்பறைத் தொட்டி உறை, காலணிகள் உள்ளிட்ட பொருள்களை விற்றதற்காக Amazonக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Amazon பொருள்களை வாங்க வேண்டாம் என்று கூறும் #BoycottAmazon எனும் குறிப்பு சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவி வருகிறது.

அங்கு Twitterஇல் அது முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Amazonக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சொல்லி வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு Twitter பதிவுகளின் மூலம் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முன் 2017இல் இதுபோன்ற சம்பவம் நடந்தது.

Amazonஇன் கனடிய இணையப்பக்கத்தில் இந்தியக் கொடி கொண்ட வாசல் மிதிகள் விற்கப்பட்டன.

அவை இணையப்பக்கத்திலிருந்து நீக்கப்படாவிடில் Amazon ஊழியர்களின் விசாவை ரத்து செய்வதாக அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரித்தார்.

இம்முறை இந்துக் கடவுள்களின் சித்திரங்களைக் கொண்ட பொருள்கள் சில, நிறுவனத்தின் இணையப்பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.  

Top