Images
  • plastic

Amazon Fresh தளத்தில் வாங்கப்படும் உறைந்த பொருள்கள் தண்ணீர் போத்தல்களுடன் விநியோகம் செய்யப்படும்

சிங்கப்பூரில் இன்று முதல் Amazon Fresh தளத்தில் வாங்கப்படும் உறைந்த மற்றும் குளிர்ந்த பொருள்கள், 100 விழுக்காடு மறுபயனீடு செய்யக்கூடிய உறைந்த தண்ணீர் போத்தல்களுடன் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோகத்தின்போது இறைச்சி, கடலுணவு, ஐஸ் கிரீம் ஆகிய பொருள்களின் தரத்தை உறுதிசெய்ய, ஜெல் பொட்டலத்திற்குப் (gel pack) பதில், 100 விழுக்காடு மறுபயனீடு செய்யக்கூடிய தண்ணீர் போத்தல்கள் பயன்படுத்தப்படும்.

ஆசியாவிலேயே சிங்கப்பூரில் தான் அந்த மாற்றம் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.

அந்தப் போத்தல் நீரைச் சமையல், செடிகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது குடிக்கலாம்.

அந்தப் புதிய முயற்சி மூலம் விநியோகப் பொட்டலங்களால் ஏற்படக்கூடிய குப்பைகளைக் குறைக்க Amazon நிறுவனம் முற்படுகிறது.

"உறைந்த தண்ணீர் போத்தல்களும் அந்த ஜெல் பொட்டலங்களும் ஒரே அளவு குளுமையை அளிக்கின்றன. புதிய மாற்றத்தால் பொருள்களின் தரத்தில் எந்தக் குறைபாடும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது".

என Amazon சிங்கப்பூரின் செயல்பாடுகளுக்கான பொது மேலாளர் கூறினார்.

Top