Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: அமெரிக்காவில் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று

COVID-19: அமெரிக்காவில் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று

வாசிப்புநேரம் -
COVID-19: அமெரிக்காவில் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று

(கோப்புப் படம்: REUTERS/Mike Blake)

அமெரிக்காவில், நோய்ப் பரவலுக்கு ஆளானோர் எண்ணிக்கை தற்போது 3 மில்லியனைக் கடந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு 131,000-க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றுக்குப் பலியாகினர்.

இம்மாத முதல் வாரத்தில் 18 மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவாகக் கூடுதலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

டெக்ஸஸ் மாநிலத்தில் இரண்டு வாரங்களில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது.

ஆஸ்டின் நகர மேயர், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் இன்னும் இரண்டு வாரங்களில் நிரம்பிவிடும் என்று எச்சரித்துள்ளார்.

இன்னும் பத்து நாள்களில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் புதியவர்களுக்கு இடமிருக்காது என்று அவர் தெரிவித்தார்.

அரிஸோனா மாநில மருத்துவமனைகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான தீவிரச் சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் நிரம்பிவிட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்