Images
  • 500k
     (படம்: Reuters/Callaghan O'Hare)

அமெரிக்கா: COVID-19 நோயால் மாண்டோரின் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியது

அமெரிக்காவில், COVID-19 நோயால் மாண்டோரின் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியுள்ளது.

அது, உலக அளவில் நேர்ந்த COVID-19 மரணங்களில் சுமார் 20 விழுக்காடு.

அந்தப் போக்கு மிகுந்த கவலை அளிப்பதாக அமெரிக்காவின் முன்னணி தொற்றுநோய் நிபுணர், டாக்டர் அந்தோணி ஃபௌச்சி (Anthony Fauci), ABC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், வளர்ச்சியடைந்த, பணக்கார நாடான அமெரிக்கா, நோய்ப்பரவலைச் சமாளிக்கத் தவறியுள்ளதாக டாக்டர் ஃபௌச்சி கூறினார்.

அமெரிக்க வரலாற்றில் மிகுந்த துயரமிக்க இந்தத் தருணத்தை அனுசரிக்கும் நோக்கில், அனைத்து அரசாங்க கட்டடங்களில் உள்ள தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

நோய்த்தொற்றினால் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில், துணை அதிபர் கமலா ஹேரிஸுடன் திரு. பைடன் கலந்துகொள்கிறார். 

Top