Images
  • asylum
    (படம்: AFP/Mark RALSTON)

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவோருக்கு அடைக்கலம் வழங்கப்படமாட்டாது


அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோருக்கு இனி அடைக்கலம் வழங்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோ குடிநுழைவு முறை பலகாலமாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாய் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார்.

புதிய விதிமுறையை அமெரிக்க உள்துறைப் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டது.

அதிபர் டோனல்ட் டிரம்ப் அதில் விரைவில் கையெழுத்திடுவார் என்றும் இந்த விவகாரத்தின் தொடர்பில் வழக்குகளைச் சந்திக்க நேரிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் எங்கு இருந்தாலும் அடைக்கலம் பெறுவதற்கான உரிமை வழங்கப்படவேண்டும் என்று அமெரிக்கச் சட்டம் கூறுகிறது.

எனினும் புதிய விதிமுறையின்கீழ், நாட்டின் நலனுக்குப் பங்கம் ஏற்படும் சூழ்நிலையில் சட்டவிரோத குடிநுழைவைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவருக்கு உண்டு எனக் கூறப்பட்டது.

திரளாகத் தஞ்சம் தேடி வருவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அந்த நடவடிக்கை உதவும் என்று நம்புவதாக அதிகாரிகள் கூறினர்.

   

Top