Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வெளியான காணொளி

தண்டவாளத்துக்கு மிக அருகில் அது நிற்பதைக் காணொளி காட்டுகிறது.

வாசிப்புநேரம் -
அமெரிக்க வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வெளியான காணொளி

அமெரிக்க வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வெளியான காணொளி

அமெரிக்கக் காவல்துறையினர் வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனர். பார்த்தாலே பதறவைக்கும் அந்தக் காணொளி அது.

ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்லக் காத்திருக்கும் கறுப்புநிறக் கார்.

தண்டவாளத்துக்கு மிக அருகில் அது நிற்பதைக் காணொளி காட்டுகிறது.

ரயில் வருவதற்குள் தாண்டிவிட வேண்டும் என்ற அவசரம்.

வாகனமோட்டி வேக விசையை அழுத்திய அதே நேரத்தில் ரயிலும் குறுக்கே வந்தது.

ரயில் காரை வெகுதூரம் தள்ளிக்கொண்டே சென்றது.

பார்த்தாலே குலைநடுங்க வைக்கும் காணொளி மற்ற வாகனமோட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று காவல்துறையினர் நம்புகின்றனர்.

காயமடைந்த வாகனமோட்டி கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்