Images
சீனாவுடன் புது வர்த்தக ஒப்பந்தம்-அமெரிக்கா ஆர்வம்: வெள்ளை மாளிகை ஆலோசகர்
அமெரிக்கா சீனாவுடன் புது வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வமாக இருப்பதாய் வெள்ளை மாளிகைப் பொருளியல் ஆலோசகர் லேரி குட்லோ தெரிவித்துள்ளார்.
இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் மினுச்சின் எடுத்துவரும் முயற்சிகளுக்குத் தாம் ஆதரவு வழங்குவதாகவும் திரு. குட்லோ கூறினார்.
இன்னும் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
இருநாடுகளும் இவ்வாரம் வாஷிங்டனில் மீண்டும் பேச்சு நடத்துகின்றன.
இறக்குமதி வரிகளைக் கூடுமான அளவு குறைக்கவும் வரி சாராத தடைகளை அகற்றவும் இருதரப்பும் முயற்சி எடுக்க வேண்டும்.
தடையற்ற வர்த்தகம் ஒரு நல்ல தீர்வாக அமையும் என்றும் திரு. குட்லோ குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன இறக்குமதிகளுக்கு வரி விதித்தபின் இருநாட்டு வர்த்தக உறவில் பதற்றநிலை உருவானது.

