Images
  • America Latest Deaths
    (படம்: AP Photo/Evan Vucci)

அமெரிக்கா Covid-19 கிருமிப் பரவலின் புதிய மையமாக உருவெடுக்கக்கூடும்: உலக சுகாதார நிறுவனம்

அமெரிக்கா, Covid-19 கிருமிப் பரவலின் புதிய மையமாக உருவெடுக்கும் சாத்தியம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் கிருமித்தொற்று காரணமாக இதுவரை 650 பேர் மரணமடைந்தனர்.

சுமார் 52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அமெரிக்காவில் நடப்பில் உள்ள முடக்கத்தை அடுத்த மாத நடுப்பகுதிவாக்கில் தளர்த்த விரும்புவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொதுச் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வரும் வேளையில் திரு. டிரம்ப் அவ்வாறு கூறினார்.

தொடர்ந்து முடக்கத்தை நீட்டிப்பது மிதமிஞ்சிய செயல் என்றும், அது அமெரிக்கப் பொருளியலைச் சீர்குலைத்து விடக்கூடும் என்றும் திரு. டிரம்ப் சொன்னார்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த தென் கொரியா பெரிய அளவில் நடத்திய பரிசோதனை உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றது.

ஆனால், கிருமித்தொற்றுச் சோதனைகளை நடத்துவதில் அமெரிக்கா, தென் கொரியாவை விடச் சிறப்பாகச் செய்திருப்பதாக அவர் கூறினார்.  

Top