Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்

அமெரிக்கா: மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்

(படம்: AFP Photo)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், COVID-19 கொள்ளை நோயால் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, தேசியக் கொடிகள் அனைத்தையும் அரைக் கம்பத்தில் பறக்கவிடும்படி உத்தரவிட்டுள்ளார்.

மூன்று நாள்களுக்குக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

கொரோனா கிருமியால் மாண்டோர் எண்ணிக்கை 100-ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையில், திரு. டிரம்ப்பின் அறிவிப்பு வந்துள்ளது.

மத்திய அரசாங்கக் கட்டடங்களிலும் தேசிய அரும்பொருளகங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என்று திரு. டிரம்ப் சொன்னார்.

திங்கள்கிழமைவரை அது நடப்பில் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ராணுவச் சேவையின்போது மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவ்வாறு செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

ராணுவத்தில் பணியாற்றியபோது மாண்டோரை நினைவுகூரும் Memorial நாளை, அமெரிக்கா, திங்கள்கிழமை அனுசரிக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்