Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவின் புதிய ஏவுகணைச் சோதனையை ரஷ்யாவும் சீனாவும் சாடின

அமெரிக்காவின் புதிய ஏவுகணைச் சோதனையை ரஷ்யாவும் சீனாவும் சாடியுள்ளன. 

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் புதிய ஏவுகணைச் சோதனையை ரஷ்யாவும் சீனாவும் சாடின

(படம்: AFP/STR)

அமெரிக்காவின் புதிய ஏவுகணைச் சோதனையை ரஷ்யாவும் சீனாவும் சாடியுள்ளன.

அத்தகையச் சோதனை ராணுவப் பதற்றத்தை அதிகரிப்பதுடன் ஆயுதப்போட்டாப்போட்டியைத் தூண்டும் அபாயம் மிக்கது என்றும் அவை கூறின.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு நேற்று முன் தினம் கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் அந்த ஏவுகணைச் சோதனையை நடத்தியது.

அது 500 கிலோ மீட்டருக்குப் பிறகு அதன் இலக்கை அடைந்தது.

அணுவாயுத உடன்படிக்கையில் இருந்து ஆகஸ்ட் 2-ம் தேதி விலகிய பிறகு வாஷிங்டன் மேற்கொண்டிருக்கும் முதல் ஏவுகணைச் சோதனை அது.

நீண்ட காலமாய் உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருந்ததை அந்தச் சோதனைக் காட்டுவதாக மாஸ்கோ கூறியது.

உடன்படிக்கையில் இருந்து விலகிய சில வாரங்களில் அத்தகையச் சோதனையை முன் ஏற்பாடின்றி நடத்தியிருக்க முடியாது என்றும் அது கூறியது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்