Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கள்ளக் குடியேறிகளின் பிள்ளைகளைத் தங்க வைக்க ராணுவத் தளங்களைப் பார்வையிட்டுவரும் அமெரிக்க அரசாங்கம்

சுமார் 20,000 பிள்ளைகளைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி அரசாங்கம் கூறியிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. 

வாசிப்புநேரம் -
கள்ளக் குடியேறிகளின் பிள்ளைகளைத் தங்க வைக்க ராணுவத் தளங்களைப் பார்வையிட்டுவரும் அமெரிக்க அரசாங்கம்

(படம்:AFP)

6 மாதக் காலத்தில் சுமார் 316 மில்லியன் வெள்ளி செலவில் அந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகாம்கள் கொண்ட பகுதிகளை அமைப்பதற்கு ஒரு வருடம் வரைக் கூட ஆகலாம் எனக் கூறப்பட்டது.

மெக்சிக்கோ எல்லைப் பகுதியில் அதிகரித்துவரும் சர்ச்சையைத் தணிக்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுவரை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுக்குமாறு கடற்படையிடம் கேட்கப்பட்டதில்லை.

இப்போது அலாபாமா கடற்படை ஆகாயத் தளத்தில் குடியேறிகளை வைப்பதற்காக வரையப்பட்ட திட்டம் உறுதியானதல்ல என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி வலியுறுத்தினார். 

டைம்ஸ் சஞ்சிகை அந்தத் தகவலை வெளியிட்டது. 

கள்ளக்குடியேறிகளையும் அவர்களின் பிள்ளைகளையும் பிரிக்கும் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுமார் 20,000 பிள்ளைகளைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி அரசாங்கம் கூறியிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. 

டெக்ஸஸில் உள்ள ராணுவத் தளங்களில் மூன்றை அரசாங்கம் பார்வையிட்டதாகவும் மேலும் அர்கான்ஸஸில் உள்ள ராணுவத் தளங்களைச் சோதனையிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்