Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அணுவாயுதச் சோதனைகளை நடத்த அமெரிக்கா பேச்சுவார்த்தைை ?

அணுவாயுதச் சோதனைகளை நடத்த அமெரிக்கா பேச்சுவார்த்தைை ?

வாசிப்புநேரம் -
அணுவாயுதச் சோதனைகளை நடத்த அமெரிக்கா பேச்சுவார்த்தைை ?

(படம்: REUTERS/Tom Brenner/File Photo)

அமெரிக்கா சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணுவாயுதச் சோதனைகளை நடத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின்கீழ் கடந்த 15ஆம் தேதி சில அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக Washington Post நாளேடு குறிப்பிட்டது.

கடைசியாக அமெரிக்கா 1992 ஆம் ஆண்டு அணுவாயுதச் சோதனைகளை நடத்தியது.

அத்தகைய சோதனை மீண்டும் நடத்தப்பட்டால் அது சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எச்சரிக்கையாக அமையும் என்று கருதப்படுகிறது.

சீனாவும் ரஷ்யாவும் அணுவாயுதச் சோதனைகளை நடத்துவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் அதை இரு நாடுகளும் மறுத்துவருகின்றன.

அமெரிக்கா அணுவாயுதச் சோதனைகளை நடத்துவது தேவையில்லாத விளைவுகளை உண்டாக்கும் என்றும் வடகொரியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்றும் அணுவாயுதச் சோதனைகளுக்கு எதிரான ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்