Images
  • e
    (படம்: AFP)

அமெரிக்காவின் 50 மாநிலங்களும் முடக்கநிலையை ஓரளவு தளர்த்தின

அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களும், இரண்டு மாத முடக்கத்துக்குப் பிறகு கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தத் தொடங்கியுள்ளன.

கனெட்டிகட் மாநிலம் நேற்று முடக்கக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய 50வது மாநிலமானது.

அங்கு கடைகளும், உணவகங்களும் சில நிபந்தனைகளோடு திறக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இருப்பினும், கிருமித்தொற்று விகிதத்திலும், பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதிலும், மாநிலத்துக்கு மாநிலம் அதிகமான வேறுபாடுகள் நிலவுகின்றன.

கிருமிப்பரவல் குறையும் அறிகுறிகள் இல்லாவிட்டாலும்கூட, சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

நியூயார்க், நியூ ஜெர்சி, வாஷிங்டன்-ஆகிய மாநிலங்களில் கிருமிப்பரவல் குறைந்தாலும் அரிஸோனா, நார்த் கரோலைனா போன்ற மாநிலங்களில் கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் வேறுபடுகின்றன.

மேரிலாண்ட் மாநிலத்தில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும், கடற்கரைக்குச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆக்லஹோமாவில் குடியிருப்பாளர்கள் சமயத் தலங்களுக்கும், கடைகள், கேளிக்கை விடுதிகளுக்கும் செல்லலாம்.

வடகிழக்குப் பகுதி, மேற்குக் கரையோரம் உள்ள வட்டாரங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன.

கலிஃபோர்னியாவில் போதுமான அளவில் சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதோடு கிருமித்தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள பகுதிகளில் மட்டும் சில உணவகங்களும், கடைகளும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.  

Top