Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் அதிர்ச்சி தருகின்றன : கனடியப் பிரதமர்

அமெரிக்காவில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் அதிர்ச்சி தருகின்றன : கனடியப் பிரதமர்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் அதிர்ச்சி தருகின்றன : கனடியப் பிரதமர்

(படம்: AFP/Dave Chan)

அமெரிக்காவில் கறுப்பின ஆடவர் ஒருவரின் மரணத்தின் காரணமாக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் அதிர்ச்சி தருவதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களைக் கனடியர்கள் திகிலுடன் பார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

"கனாடாவிலும் இனவாதப் பிரச்சினைகள் உள்ளன, கறுப்பினத்தவர் மீதான பாகுபாடுகள், ஒருதலைப்பட்சமான செயல்கள் போன்றவை தினமும் நடக்கின்றன, அவற்றைச் சீர்செய்ய கனடாவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் திரு ட்ரூடோ.

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் (Minneapolis) நகரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.

ஆயுதமற்ற கறுப்பின ஆடவர் ஒருவரின் கழுத்தில் வெள்ளையினக் காவல்துறை அதிகாரி ஒருவர் முழங்காலை வைத்து அழுத்திய போது ஆடவர் மூச்சுவிடத் திணறி பின்னர் மாண்டார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்