Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையிலிருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்டார்

அமெரிக்கா: நொவல் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தவறுதலாகத் தனிமைப்படுத்தப்பட்டோர் இருக்கும் ராணுவ முகாமுக்கு அனுப்பப்பட்டார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையிலிருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்டார்

(கோப்புப்படம்: AFP/Philip Fong)

அமெரிக்கா: நொவல் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தவறுதலாகத் தனிமைப்படுத்தப்பட்டோர் இருக்கும் ராணுவ முகாமுக்கு அனுப்பப்பட்டார்.

சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது.

கிருமி தொற்றியுள்ள நபரின் மருத்துவச் சோதனை முடிவுகளைக் கையாளும்போது தவறு நேர்ந்தது.

அவர் பாதிக்கப்படவில்லை என்று கருதியதால் அந்நபர் தவறுதலாக மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர், சீனாவிலிருந்து திருப்பி அழைக்கப்பட்ட 200 அமெரிக்கர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சான் டியாகோ (San Diego) ராணுவ முகாமுக்குச் சென்றார்.

அவருக்குக் கிருமித்தொற்று இருப்பதை உணர்ந்த அதிகாரிகள், நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தென் கலிஃபோர்னியா ராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்