Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கத் துப்பாக்கிச் சூடு: மெக்சிகோ குடிமக்களை இலக்காகக் கொண்டது-சந்தேக நபர் ஒப்புதல்

அமெரிக்காவின் லெ பாஸ்ஸோ (El Paso) நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைதான சந்தேக நபர், மெக்சிகோவைச் சேர்ந்தவர்களை குறி வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கத் துப்பாக்கிச் சூடு: மெக்சிகோ குடிமக்களை இலக்காகக் கொண்டது-சந்தேக நபர் ஒப்புதல்

படம்: AFP/Handout

அமெரிக்காவின் லெ பாஸ்ஸோ (El Paso) நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைதான சந்தேக நபர், மெக்சிகோவைச் சேர்ந்தவர்களை குறி வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த அந்தச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

டெக்ஸஸ் மாநிலத்திலுள்ள எல்லையோரப் பேரங்காடியில் பாட்ரிக் க்ரூசியஸ் (Patrick Crusius), துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒப்புக்கொண்டார்.

அந்தச் சம்பவம், வெறுப்புணர்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட குற்றச்செயலாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறது.

அந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, துப்பாக்கி வாங்க விரும்புவோரின் பின்புலத்தைச் சோதிப்பது பற்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து வருவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

அதே வேளையில், தேசிய துப்பாக்கிச் சங்கத்தின் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்