Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: அரசாங்க முடக்கம் தொடர்பான முக்கிய பேரப்பேச்சில் முன்னேற்றம் இல்லை - குடியரசுக் கட்சியின் மூத்த பேரப்பேச்சாளர்

அமெரிக்காவில் அரசாங்கத் துறைகள் மீண்டும் முடக்கம் காண்பதைத் தடுப்பதற்கான முக்கியப் பேரப்பேச்சில் முன்னேற்றம் ஏதும் இல்லை என குடியரசுக் கட்சியின் மூத்த பேரப்பேச்சாளர் ரிச்சர்ட் ஷெல்பி (Richard Shelby) கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

குடியேற்றம் தொடர்பான விவகாரத்தில் தரப்புகளுக்கு இடையே இணக்கம் காணப்படவில்லை என்றார் அவர்.

மெக்சிகோ உடனான எல்லைப் பகுதியில் சுவர் ஒன்றை எழுப்ப பல பில்லியன் டாலர் நிதியை அதிபர் டோனல்ட் டிரம்ப் கோரி வருகிறார்.
அதற்கு இதுவரை ஒப்பதல் அளிக்கப்படவில்லை.

அந்தக் காரணத்தால், அரசாங்கத்தின் சில துறைகள் 35 நாட்களுக்கு முடக்கம் கண்டிருந்தன.

கடந்த மாத இறுதியில் அவை மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பின.

அந்த நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க, வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஒப்பந்தம் ஒன்று எட்டப்படவேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்